சென்னை

மிழக முதல்வர் மு க ஸ்டாலின் 25 மினவர்களையும் அவர்களது படகுகளை மீட்க கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார் .

தமிழகத்தை சேர்ந்த 25 மீனவர்களையும் அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படை சிறபிடித்ததது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  தமிழகம் எங்கும் இலங்கை கடற்படையின் அக்கிரமத்துக்கு எதிராக கடும் கண்டனங்கல் எழுந்து வருகின்றன.

இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மத்திய உள்த்றை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடித்தத்தில்,,

“சமீப வாரங்களில் இலங்கைக் கடற்படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளதோடு. IND-TN-10-MO- 1379 மற்றும் IND-TN-09-MO-2327 என்ற பதிவெண்களைக் கொண்ட இரண்டு மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளிலும், இரண்டு பதிவு செய்யப்படாத மீன்பிடிப் படகுகளிலும் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள் 1-7-2024 அன்று இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (01.07.2024)தமிழகத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில்,  இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன”

என்று கேட்டுக் கொண்டுள்ளார்.