சென்னை
மக்களுடன் ஆடியோ தொடர் மூலம் பேச உள்ளதாகத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் கேள்வி பதிலாக பல்வேறு விஷயங்களை வீடியோ வடிவில் பகிர்ந்து வந்தார். தற்போது ஆடியோ தொடர் (Podcast) மூலம் மக்களுடன் பேசப்போவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின், வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.
அவர் இந்த ஆடியோ தொடருக்கு ‘ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா’ (Speaking for india) என்று தலைப்பு வைத்துள்ளார்.
அவர் இது குறித்து வெளியிட்டுள்ள வீடியோவில்,
“நாம் இந்தியாவுக்காக பேச வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம். வரும் 2024-ல் முடியப்போகிற பாஜக ஆட்சி, இந்தியாவை எப்படி எல்லாம் உருக்குலைத்திருக்கிறார்கள்; நாம் எதிர்காலத்தில் கட்டமைக்க விரும்புகிற சமத்துவ, சகோதரத்துவ இந்தியா எப்படி இருக்கும் என்று ஒரு ஆடியோ தொடர்மூலம் பேசப் போகிறேன். தொடருக்கு ‘ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா’ என்ற தலைப்பை வைத்துக் கொள்ளலாமா..? தெற்கிலிருந்து வரும் இந்த குரலுக்காகக் காத்திருங்கள்..!”
என்று கூறியுள்ளார்.