தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா செல்ல உள்ளார்.

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா செல்லும் தமிழக முதல்வருக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின நிகழ்ச்சிகளுக்குப் பிறகு ஆகஸ்ட் 22ம் தேதி அவர் அமெரிக்கா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

15 நாள் அமையவுள்ள இந்த பயணத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் துறைச் செயலாளர்கள் அடங்கிய குழு முதல்வருடன் செல்லவுள்ளது.

இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஆகஸ்ட் 15க்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

துணை முதல்வர் குறித்த செய்திகள் ஏற்கனவே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது தமிழக நிர்வாகத்தை முதல்வர் ஸ்டாலினே கவனிப்பார் என்று தெரியவந்துள்ளது.