சென்னை

வெக தலைவர் விஜய் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ரூ. 2.85 கோடி மதிப்பில் முதல்வர் படைப்பகத்தை திறந்து வைத்தார்.  இந்த முதல்வர் படைப்பகத்தில் படிக்க ஒரு தளம், பணியாற்ற ஒரு தளம், உணவு சாப்பிட ஒரு தளம் ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டது.

இங்கு ஒரே நேரத்தில் 51 பேர் படிக்கின்ற அளவுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. படிப்பிற்குத் தேவையான புத்தகங்களை கொண்ட ஒரு நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார்.

விழாவில் முதலவர் மு க ஸ்டாலின்.

“புதிது புதிதாக கட்சி தொடங்குபவர்கள் கூட திமுக அழிய வேண்டும் என நினைக்கின்றனர். அவர்கள் இந்த 3 ஆண்டுகளில் திமுக அரசு செய்துள்ள சாதனைகளை ஒரு முறை எண்ணிப் பார்க்க வேண்டும். ‘வாழ்க வசவாளர்கள்’என அண்ணா கூறியதை நினைவில் வைத்து செயல்படுகிறோம். திமுக அரசை விமர்சிப்பவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. மக்கள் பணியை செய்யவே எங்களுக்கு நேரமில்லை”

என்று நடிகர் விஜயக்கு பதிலளித்துள்ளார்.