தமிழ்நாட்டின் செழுமைக்கு ஆதரவு தேடி வாய்ப்புகளின் பூமியான அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தனது காலை நடைப்பயிற்சியை மேற்கொண்டார்.
2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் சென்று இறங்கியிருக்கும் ஸ்டாலின் இன்று மாலை அங்கு நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், “சான் பிரான்சிஸ்கோவில் ஒரு விறுவிறுப்பான நடைப்பயணத்துடன் இன்றைய நாளைத் தொடங்குகிறேன், இன்று மாலை முதலீட்டாளர்கள் மாநாட்டிற்குத் தயாராகி வருகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பயணத்தின் போது ஸ்டாலின் அங்குள்ள தொழிலதிபர்கள், மற்றும் பார்ச்சூன் 500 நிறுவனங்களின் CEO க்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களை சந்தித்து தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முதலீடுகளை ஈர்ப்பதற்காக பல்வேறு வளர்ந்து வரும் துறைகளில் தமிழகத்தின் வலிமையை வெளிப்படுத்தும் கருத்தரங்குகளில் கலந்து கொள்கிறார்.