சென்னை
தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து இன்று முதல்வர் மு க ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் சென்றதால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஆயினும் கொரோனா பாதிப்பு குறையாததால் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டிருந்த தளர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்த தளர்வுகள் அற்ற ஊரடங்கால் தமிழகத்தில் கொரோனா தாக்கம் சற்று குறையத் தொடங்கி உள்ளது. ஆயினும் மாநிலம் முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. எனவே கொரோனா தாக்கம் இருக்கும் மாவட்டங்களில் மட்டும் படிப்படியாக ஊரடங்கைத் தளர்த்தலாம் என நிபுணர்கள் பரிந்துரைத்தனர்.
தற்போது தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு வரும் 7 ஆம் தேதி அதிகாலை வரை அமலில் உள்ளது. இது மேலும் நீட்டிக்கப்படுமா அல்லது தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்பது குறித்து இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காலை 11.30 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார்.