புதுச்சேரி
புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் எம் டி ஆர் ராமச்சந்திரன் மரணத்துக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சுமார் 91 வயதாகு,ம் புதுச்சேரி முன்னாள் முதல்வர் எம்.டி.ஆர்.ராமச்சந்திரன் வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இன்று புதுச்சேரி முதல்வர் எம் டி ஆர் ராமச்சந்திரனின் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் கட்சி தலைவர்கள் எம்.டி.ஆர் ராமச்சந்திரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
”புதுச்சேரியின் முன்னாள் முதல்வரும், புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைப்பாளருமாகிய ராமச்சந்திரன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கழகத்தின் சார்பில் முதல்வராக இருந்து, புதுச்சேரியின் வளர்ச்சிக்காகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்திச் சாதனை படைத்தவர். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.
என்று தெரிவித்துள்ளார்.