2024 -25ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
அதன் முக்கிய அம்சங்கள் :
- கல்லணை கால்வாய் புனரமைப்பு பணிக்கு 400கோடி ஒதுக்கீடு
- தஞ்சையில் 120கோடி மதிப்பீட்டில் சிப்காட் பூங்கா அமைக்கப்படும்
- தூத்துக்குடியில் 2ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விண்வெளி தொழில் மற்றும் உந்துசக்தி பூங்கா அமைக்கப்படும்
- ரூ2483கோடி மதிப்பில் விருதுநகர், சேலத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்
- தமிழகத்தில் மருத்துவகட்டமைப்பை மேம்படுத்த 333கோடி நிதி ஒதுக்கீடு
- மதுரை, திருச்சியில் புதிய டைடல் பூங்கா அமைக்கப்படும்
தமிழகத்தில் 4 இடங்களில் ஒலிம்பிக் பயிற்சி அகாடமி அமைக்கப்படும் - மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு ஆகிய நகரங்களில் நதிகளை மீட்டெடுக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ₹5 கோடி ஒதுக்கீடு
- வைகை, காவிரி, தாமிரபரணி, நொய்யல் ஆறுகளை ஒட்டிய பகுதிகளை மேம்படுத்த புதிய திட்டம்
- சிறு குறு நடுத்தர தொழில்துறைக்கு ரூ. 1557 கோடி நிதி ஒதுக்கீடு
- கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் சாலைப்பணிகள் ₹1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்
- 2000 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட ₹356 கோடி ஒதுக்கீடு
- 5000 ஏரிகள், குளங்கள் புனரமைப்பு செய்ய ₹500 கோடி ஒதுக்கீடு
- சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ₹100 கோடி ஒதுக்கீடு
- வடசென்னை பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ₹1000 கோடி ஒதுக்கீடு
- அடையாறு நதி சீரமைப்புக்கு ₹1500 கோடி ஒதுக்கீடு
- சென்னை மாநகரில் பொதுக்கழிப்பிடங்களை மேம்படுத்த ₹430 கோடியில் புதிய திட்டம்
- சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ₹500 கோடி ஒதுக்கீடு
- சென்னையில் சாலைகளை விரிவுபடுத்த ₹300 கோடி ஒதுக்கீடு
- முதலமைச்சரின் தாயுமானவர் என்ற புதிய திட்டம் அறிமுகம்
- சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களை 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் பொழிபெயர்க்க ₹2 கோடி ஒதுக்கீடு
- அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 புதிய நூல்கள் தமிழில் வெளியிடப்படும்
- தமிழ் மொழியை நவீனப்படுத்த AI உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ₹5 கோடி ஒதுக்கீடு
- முசிறி, தொண்டி ஆகிய இடங்களிலும் அகழாய்வு நடத்தப்படும்
- ₹65 லட்சம் செலவில் அழகன் குளத்தில் ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும்
- கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ளப்படும்
- கீழடியில் திறந்தவெளி அரங்கு ₹17 கோடி செலவில் அமைக்கப்படும்
- சிந்து சமவெளி நூற்றாண்டு கருத்தரங்கு சென்னையில் நடத்தப்படும்