சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி தொடங்கிய நிலையில், இன்று தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர்  எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்  பச்சை துண்டுடன் வந்து, மாநில வேளாண் துறை  பட்ஜெட்டை பேரவையில் தாக்கல் செய்து பேசி வருகிறார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:-

உழவர் சந்தை காய்கறிகளை நுகர்வோர் வீடுகளுக்கு டெலிவரி செய்யும் வகையில் உள்ளூர் இணைய வர்த்தகத்துடன் இணைக்கப்படும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் துறைக்கு மொத்தமாக இந்த நிதியாண்டில்  ரூ.45,661 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

5 விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கவும் வழிவகை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி,  நல்லூர் வரகு, வேதாரண்யம் முல்லை, நத்தம் புளி, ஆயக்குடி கொய்யா, கப்பல்பட்டி கரும்பு முருங்கை ஆகிய 5 விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்க வழிவகை செய்யப்படும். அதற்காக ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

பயிர்க் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் தற்போது வரை ரூ.10,346 கோடி தொகையும், வட்டித் தொகையும் தமிழக அரசால் விடுவிக்கப்பட்டுள்ளன.  20256-26ல் ரூ.1,427 கோடி தள்ளுபடி செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நெல் கொள்முதல் மூலமாக ரூ.297 கோடி நேரடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் 50 உழவர் சந்தைகள் தேர்வு செய்யப்பட்டு ரூ.10 கோடியில் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

வட்டாரங்கள் தோறும் தேர்வு செய்யப்பட்ட மையங்களில் வேளாண் விளை பொருட்கள் விற்பனை செய்யப்படும்.

அதேபோல் உழவர் சந்தை காய்கறிகளை நுகர்வோர் வீடுகளுக்கு எடுத்து சென்று டெலிவரி செய்ய உள்ளூர் இணைய வர்த்தகத்துடன் இணைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“1 லட்சம் ஏக்கரில், ரூ. 12 கோடியில் மாற்று பயிர் சாகுபடி திட்டம் செயல்படுத்தப்படும்.

ரூ. 15 கோடியில், 7 அரசு விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனம் மூலம் 3,000 மெட்ரிக் டன் விதைகள் சுத்திகரிப்பு செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்படும்”
“நவீன வேளாண் கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். அதிக உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு விருது வழங்க ரூ. 55 லட்சம் ஒதுக்கீடு.

நம்மாழ்வார் விருது திட்டம் இந்த ஆண்டும் செயல்படுத்தப்படும்

“ஒருங்கிணைந்த பண்ணையம் உள்ளிட்ட திட்டங்களில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின உழவர்களுக்கு கூடுதல் மா

“எண்ணெய் வித்துக்கள் இயக்கம்”
எண்ணெய் வித்து பயிர்களை அதிகரிக்கும் விதமாக 108 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்காச்சோள உற்பத்தியை அதிகரித்திடும் விதமாக 40 கோடி நிதியில் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிப்பு

ஒரு லட்சம் ஏக்கரில் மாற்றுப்பயிர் திட்டம்
தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் ஏக்கரில் மாற்றுப்பயிர் திட்டம். 12.50 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டுணர் சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு
100 முன்னோடி உழவர்களை ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு கண்டுணர் சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

கால்நடைகளின் இனப்பெருக்கத்திற்கு ரூ.5.62 கோடி நிதி ஒதுக்கீடு
மலட்டுத்தன்மையுள்ள கால்நடைகளின் இனப்பெருக்கத்திற்கு ரூ.5.62 கோடி நிதி ஒதுக்கீடு; மின்சாரத்தினால் இயங்கும் 3.000 புல் நறுக்கும் கருவிகளுக்கு மானியம் வழங்கிட ரூ.4.83 கோடி நிதி ஒதுக்கீடு. மாவட்ட கால்நடைப்பண்ணைகளில் மாட்டுச் சாணம் கொண்டு மண்புழு உரம் தயாரிக்கும் திட்டத்திற்கு ரூ.3.5 கோடி ஓதுக்கீடு என்று வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

“பயிர் சாகுபடி அதிகரிக்க சிறப்பு தொகுப்பு”
டெல்டா அல்லாத மாவட்டங்களில் பயிர் சாகுபடி அதிகரிக்க சிறப்பு தொகுப்பு திட்டம் செய்யப்பட்டுள்ளது. வேளாண் பட்ஜெட்டில் 102 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு
பாரம்பரிய மலரான மல்லிகை சாகுபடியை அதிகரிக்க ரூ.1.60 கோடி நிதி ஒதுக்கீடு;

நறுமண ரோஜா மலர்களின் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு – வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

ரூ.10 லட்சம் வரை பொருளீட்டு கடன்
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு (FPO) ரூ.10 லட்சம் வரை பொருளீட்டு கடன் வழங்கப்படும் என அறிவிப்பு

இயற்கை வேளாண்மைக்கான திட்டம் ரூ. 12 கோடியில், 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் .

பருத்தி சாகுபடி

தமிழ்நாட்டில் பருத்தியின் தேவை அதிகரித்துள்ளதால் பருத்தி உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க பருத்தி சாகுபடி திட்டம் 2021-2022-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2025-2026-ம் ஆண்டிலும் “பருத்தி உற்பத்திப் பெருக்குத் திட்டம்” ரூ.12 கோடியே 21 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

இயற்கைச் சீற்றங்களால் விளையும் பயிர் சேதங்களினால் ஏற்படும் வருவாய் இழப்புகளில் இருந்து பாதுகாத்து, உழவர்களின் வாழ்வாதாரத்தை நிலைப்படுத்த, பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டம் 2025-2026-ம் ஆண்டில் 35 லட்சம் ஏக்கரிலான பயிர்களை காப்பீடு செய்யும் வகையில், ரூ.841 கோடி நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

சென்னை, கோவை, தூத்துக்குடி, மதுரையில் உயிர்ம வேளாண் விளைபொருட்களுக்கு தர நிர்ணய ஆய்வகம் அமைக்க ரூ.6.16 கோடி நிதி ஒதுக்கீடு.

வரும் ஆண்டில் பயிர்க்கடன் தள்ளுபடிக்காக ரூ.1,427 கோடி நிதி ஒதுக்கீடு.

பாசனத்திற்கு கடைமடை வரை நீர் செல்ல ரூ.120 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும். * 2 லட்சத்து 63 ஆயிரம் மெட்ரின் டன் கொண்ட நெல் சேமிப்பு மையம் அமைக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.