சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி தொடங்கிய நிலையில், இன்று தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பச்சை துண்டுடன் வந்து, மாநில வேளாண் துறை பட்ஜெட்டை பேரவையில் தாக்கல் செய்து பேசி வருகிறார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:-
உழவர்களின் வாழ்வில் இந்த நிதி நிலை அறிக்கை வளர்ச்சியை கூட்டும் என்று நம்பிகிறேன். கடந்த 4 ஆண்டுகளில், மொத்த சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ள நிலையில், 346 மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
பயிர்க்கடன் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலம்.
உழவர் குடும்பத்தினருக்கான உதவித்தொகைகள் உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
30 லட்சம் உழவர்களுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. ஹபயிர் கடன் ரூ. 3.58 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்ட உதவித்தொகை உயர்வு
முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் சிறு,குறு நில உழவர்கள், வேளாண் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் குடும்பத்தினருக்கு முதியோர் ஓய்வூதியத் தொகை, மகப்பேறு உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, விபத்து நிவாரணத்தொகை, இறுதிச்சடங்கு நிவாரணத்தொகை, கல்வி உதவித்தொகை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த உதவித்தொகைகள் உயர்த்தி வழங்கப்படும் என இன்று தாக்கல் செய்யப்பட்டு வரும் தமிழ்நாடு 2025-26ஆம் நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
1. நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரணத்திற்கான இழப்பீடு தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாகவும்,
2. விபத்தினால் ஏற்படும் உடல், உறுப்பு இழப்பிற்கு நிதி உதவி ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சம் ரூபாயாகவும்,
3. இயற்கை மரணத்திற்கான நிதி உதவி ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாகவும்,
4. இறுதி சடங்கு நிதி உதவி ரூ.2,500-லிருந்து ரூ.10 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
விவசாயிகளுக்கு 1.86 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
1000 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும்.
இத்திட்டத்திற்கு ரூ.3 லட்சம் முதல் 6 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.42 கோடி மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த மையங்களில் உழவர்களுக்கு தேவையான விதைகள், உரங்கள் வழங்கப்படும்.
பள்ளி மாணவர்கள் மத்தியில் இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
டெல்டா அல்லாத மாவட்டங்களில் சிறப்பு தொகுப்பு உழவர்களுக்கு வழங்கப்படும். நெல் இயந்திர நடவு மானியம், தரமான சான்று பெற்ற விதைகள் உள்ளிட்டவற்றிற்கு ரூ.102 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
3 லட்சம் ஏக்கர் பரப்பில் கோடை உழவு செய்திட ஹெக்டருக்கு ரூ.2 ஆயிரம் வீதம் மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.24 கோடி மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
63 ஆயிரம் மலைவாழ் உழவர்கள் பயன்பெற சிறுதானிய சாகுபடி, இடுபொருள் விநியோகம், வேளாண் இயந்திரங்கள் மதிப்பு கூட்டுதல் போன்றவற்றிற்கு மானியம் வழங்கிட ரூ. 22 கோடியே 80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டம் திருவண்ணாமலை, கோயம்புத்தூர், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய 20 மாவட்டகளில் செயல்படுத்தப்படும்.
வேளாண் இயந்திரம் வழங்குதல் திட்டத்தின் கீழ் ரூ. 510 கோடி செலவில் மானிய விலையில் இயந்திரம் வழங்ப்பட்டுள்ளன.
வேளாண் பட்டதாரிகளை வேளாண் தொழில் முனைவோர்களாக ஆக்கும் திட்டத்தில் 431 இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறி உள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளன.
2021-24 வரை, 147 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் நீர் பாசன பகுதிகளில் கால்வாய்களை தூர்வாரியதால், 89.90 லட்சமாக இருந்த பாசன பகுதி 96 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.
கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 215 ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது
4 ஆண்டுகளில் 35 வேளாண் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு
கடந்த 4 ஆண்டுகளில் 35 வேளாண் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிதாக 5 விளைபொருளுக்கு புவிசார் குறியீடு பெற ரூ. 15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நல்லூர் வரகு, நத்தம் புளி , காரைக்குடி கொய்யா , கப்பல்கட்டி முருங்கை, வேதாரண்யம் முல்லை ஆகிய 5 விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறபப்டும்.
50 உழவர் சந்தைகளில் 10 கோடியில் அடிப்படை கட்டமைப்பு
50 உழவர் சந்தைகள் தேர்வு செய்யப்பட்டு 10 கோடியில் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்படும். வட்டாரங்கள் தோறும் தேர்வு செய்யப்பட்ட மையங்களில் வேளாண் விளை பொருட்கள் விற்பனை செய்யப்படும். உழவர்களுக்கு 10 லட்சம் வரை முதலீட்டு கடன் வழங்கப்படும்.
டெல்டா மாவட்டங்களில் நீர்ப்பாசன பகுதிகளை தூர்வாரியதால் பாசன பகுதி 96 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.
63 ஆயிரம் மலைவாழ் உழவர்கள் பயனடையும் வகையில் ரூ. 22.80 லட்சம் மானியம் வழங்கிடப்படும். இத்திட்டத்துக்கு ரூ. 22 கோடி ஒதுக்கீடு.
டெல்டா அல்லாத மாவட்டங்களில் பயிர் சாகுபடி அதிகரிக்க சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கு ரூ. 102 கோடி ஒதுக்கீடு.
தரமான விதைகள் வழங்க ரூ. 52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
3 லட்சம் ஏக்கரில் கோடை உழவு செய்ய ரூ. 24 கோடி மானியம் வழங்கப்படும்.
உழவர்களின் நிலங்களில் விதைப் பண்ணைகள் அமைக்க ரூ.250 கோடி ஒதுக்கீடு
1000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையம் அமைக்க ரூ. 42 கோடி ஒதுக்கீடு. *
கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் 2,335 ஊராட்சிகளில் ரூ.269 கோடியில் செயல்படுத்தப்படும்.
20 மாவட்டங்களில் மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம் செயல்படுத்தப்படும்.
சிறு தானிய இயக்கத்தை செயல்படுத்த ரூ.52 கோடி ஒதுக்கீடு.
மானாவாரி நிலங்களில் மண்வளத்தை மேம்படுத்தி 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் கோடை உழவு செய்ய ரூ.24 கோடி ஒதுக்கீடு.
இயற்கை வேளாண்மையை மேம்படுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்படும்.
உணவு எண்ணெய் தேவையில் தன்னிறைவு அடைய எண்ணெய் வித்துகள் இயக்கத்திற்கு ரூ.108 கோடி ஒதுக்கீடு.
நவீன வேளாண் கருவிகள் உள்ளிட்டவற்றை கண்டறிந்து செயல்படுவோருக்கு முதல் பரிசு ரூ.2.5 லட்சம் வழங்கப்படும்.
இயற்கை வேளாண் பொருளை பூமாலை வணிகவளாகம் உள்ளிட்ட அரசு சந்தைகளில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* 63 ஆயிரம் உழவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.22 கோடியில் மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம் செயல்படுத்தப்படும்.
100 முன்னோடி விவசாயிகள் வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லப்படுவர். இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
இயற்கை சீற்றத்தால் ஏற்படும் வருவாய் இழப்பிற்காக பயிர் காப்பீடு திட்டம்.
இடுபொருட்களை ஒரே இடத்தில் பெற கூட்டுறவு வேளாண் சங்கங்களில் விநியோகம்.
35 லட்சம் ஏக்கர் பயிர்களுக்கு காப்பீடு வசதி செய்ய ரூ.841 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழ்நாடு வேளாண் காடுகள் கொள்கை வெளியிடப்படும்.
பருத்தியின் உற்பத்தியை அதிகரிக்க பருத்தி உற்பத்தி பெருக்குத் திட்டத்திற்கு ரூ.12.21 கோடி ஒதுக்கீடு
கரும்பு டன் ஒன்றுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.3,500-ஆக உயர்த்தி வழங்கப்படும். கரும்புக்கு வழங்கப்படும் சிறப்பு ஊக்கத் தொகை ரூ.215-ல் இருந்து ரூ.349-ஆக உயர்த்தப்படும்.* கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரூ.10.63 கோடி நிதி ஒதுக்கீடு. *
75 சதவீத மானிய விலையில் காய்கறிகள் விதை தொகுப்பு 15 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும்.
ரூ.125 கோடியில் ஊட்டச்சத்து வேளாண் இயக்கம் செயல்படுத்தப்படும்.
5000 ஏக்கரில் தென்னை மறுநடவு மற்றும் புத்தாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
புரதச்சத்து நிறைந்த காளான் உற்பத்தியை ஊக்குவிக்க 5 காளான் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்.