சென்னை: இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்ததுடன், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ஆசி பெற்றார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண்மை பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இதையடுத்தது, இன்று காலை வேளாண் பட்ஜெட்டுடன் அமைச்சர் எம்ஆர்கே, மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம், மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.
பின்னர் தலைமைச்செயலகம் வந்தவர், அங்கு முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஆசி பெற்றார்.
இதைத்தொடர்ந்து, இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை அமர்வு தொடங்கியதும், வழக்கமான நடைமுறைகள் முடிந்த பின்னர் தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.