சென்னை: தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மாணாக்கர்களுக்கான மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.  dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

கொரோனா தொற்று காரணமாக, தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.

தற்காலிக மதிப்பெண் பட்டியலை http://www.dge.tn.gov.in, http://www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். என்றும், ஆகஸ்டு  31-ம் தேதி வரை மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளிகளுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ந்தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை பள்ளிகள் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில், தற்போது, 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை தேர்வுத்துறை வெளியிட்டு உள்ளது.