கொல்கத்தா
மேற்கு வங்கத்தில் தலைவர்கள் மீது நடந்தது பாஜக நடத்திய போலித் தாக்குதல் என திருணாமுல் காங்கிரஸ் எம் பி மகுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை அன்று டயமண்ட் ஹார்பரில் நடக்க இருந்த கூட்டத்துக்கு பாஜக தலைவர்களான நட்டா, திலிப் கோஷ், மற்றும் கைலாஷ் விஜய் வர்கியா உள்ளிடோர் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்றுக் கொண்டிருந்த வாகனங்கள் மீது கல்லெறி தக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதல் பல வங்க டிவி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டது. ஊடக வாகனங்களும் தாக்கப்பட்டன.
இதற்கு உள்துறை அமைச்சரான அமித் ஷா கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர் திருணாமுல் காங்கிரஸ் ஆட்சியினால் மேற்கு வங்கம் பழிவாங்குதல் மற்றும் அராஜகத்தின் பக்கம் சாய்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார். இந்த தாக்குதல் குறித்து மேற்கு வங்க அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது. மேலும் மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தன்கர் மாநில சட்டம் ஒழுங்கு குறித்த அறிக்கையை மத்திய அரசுக்கு அளித்துள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து திருணாமுல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மகுவா மொய்த்ரா, “பாஜக தலைவர்கள் எப்போதும் தங்களுடன் சொந்த பாதுகாப்பு வீரர்களை மேற்கு வங்கத்துக்கு அழைத்து வருவதாக கேள்விப்பட்டேன். உங்களுடன் மத்திய ஆயுதப் படை, மத்திய பாதுகாப்புப்படை, உள்ளிட்ட பலரும் வரும் போது அவர்களால் நீங்களே ஏற்பாடு செய்துள்ள போலித் தாக்குதலில் இருந்து உங்களை காப்பாற்ற முடியாதது அவமானம் ஆகும்” என டிவிட்டரில் பதிந்துள்ளார்.