சென்னை

மிழக அரசு போக்குவரத்து கழங்கங்களுக்காக 746 சி என் ஜி வகை பேருந்துகள் வாங்க டெண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து கழகம் தொடர்ந்து பல புதிய சேவைகள் மற்றும்  புதிய பேருந்துகளை அறிமுகம் செய்து வருகிறது.  அவ்வரிசையில் நேற்று தமிழக முதல்வர் முக ச்டாலின் புதிய பேருந்துகளை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார்

அது மட்டுமின்றி எரி பொருள் சிக்கனத்துக்காகவும் தமிழக அரசு பல புதிய பேருந்துகளை அறிமுகம் செய்ய உள்ளது.   அவ்வகையில் சிஎன்ஜி பேருந்துகளை பயன்படுத்துவதால் மாதத்துக்கு ஒரு பேருந்துக்கு ரூ.75,000 மிச்சமாவதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

மேலும் சிஎன்ஜி பேருந்தில் பராமரிப்பு செலவு, இயக்கச் செலவு குறைவால் மாதத்துக்கு ரூ.75,000 மிச்சமாகிறது. தயாரிப்பு பணி ஆணை வழங்கிய பிறகு 6 மாதங்களில் சிஎன்ஜி பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

எனவே தமிழக அரசு போக்குவரத்து கழகம் 246 புதிய  சி என் ஜி வகை பேருந்துகளை கொள்முதல் செய்ய டெண்டருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.