மும்பை:
ஐபிஎல் தொடரில் அறிமுகமான குஜராத் அணி, ராஜஸ்தான் அணியை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் தகுதி சுற்று போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, 19.3 ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.
ஐபிஎல்லில் இன்று நடக்க உள்ள எலிமினேட்டர் போட்டியில் பெங்களுரு – லக்னோ அணிகள் மோதுகின்றன.
குவாலிபயர் 1ல் வென்ற அணி நேரடியாக பைனலுக்கு முன்னேறிய நிலையில், தோற்ற அணி எலிமினேட்டரில் இன்று வெற்றி பெறும் அணியுடன் குவாலிபயர் 2 ஆட்டத்தில் மோத உள்ளது.