திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பக்தர்கள் பவுர்ணமி அன்று கிரிவலம் செல்லும் வசதியாக  கோவில் நிர்வாகம்  சார்பில் இலவச ஏசி பேருந்து இயக்கப்படுகிறது.

ஏற்கனவே முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கிரிவலம் செல்ல என்எல்சி நிறுவனம்  இலவசமான பேருந்து வழங்கியது. அது பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், தற்போது, அண்ணாமலையார் கிரிவலம் செல்ல முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி 14 கிலோமீட்டர் கிரிவலம் செல்ல ஏதுவாக NLC இந்தியா நிறுவனத்தின் சார்பில் முதல் பேருந்து அண்ணாமலையார் கோவிலுக்கு ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான குளிர்சாதன வசதிகளுடன் கூடிய பேருந்து வழங்கப்பட்டுள்ளது

நினைத்தாலே முக்தி தரக்கூடிய புண்ணிய தலமாக விளங்கக்கூடியது. அது மட்டுமல்லாமல் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் விளங்குகிறது. இங்கு சிவனே மலை வடிவாக காட்சி தருவதாக ஐதீகம். இங்கு சிவனே மலை வடிவாக காட்சி தருவதாக ஐதீகம்.  இந்த மலையை சுற்றி உள்ள  14 கிலோ மீட்டர் அளவிலான சுற்றுவட்டப்பாதையில் மாதந்தோறும் வரும் பவுர்ணமி தினத்தன்று வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையார் அருளை பெறுகின்றனர். சமீப காலமாக பவுர்ணமி நாள் மட்டுமின்றி  சாதாரண நாட்கள்,  பிரதோஷம், வார விடுமுறை உள்பட  அனைத்து நாட்களில் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.

இதுமட்டுமின்றி,  ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர். அண்ணாமலையார் அவர்களது குலதெய்வம் என கூறிக்கொண்டு, திருவண்ணாமலையை அதகளப்படுத்தி வருகின்றனர்.

இத்ந நிலையில்  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் 5 இலவச குளிர்சாதனப் பேருந்து (Fee AC Bus Service) சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோக்கள் மூலம் வருகை தருகின்றனர். ஆனால் ஆட்டோக்கள் அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் நடந்து கிரிவலம் செல்ல முடியாதவர்கள் ஆட்டோவில் சென்றால் ரூ.1000 முதல் ரூ.2000 வரை வசூலிக்கப்பட்டு வருகிறது.   இதற்கு முடிவு கட்டும் வகையில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பில் ஏசி பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மத்திய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் இருந்து அண்ணாமலையார் கோவில் வரை இந்த பேருந்து சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மூத்த குடிமக்கள், சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள் கிரிவலம் செல்வதற்கு 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையில் இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சுழற்சி முறையில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]