திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபத் திருவிழா  நிகழ்ச்சிகள் விவரங்களை கோவில் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. அத்துடன் இறுதிநாளன்று அண்ணாமலையார்  மலை மீது  மகா தீபம் ஏற்ற 4,500 கிலோ நெய், ஆவினில்  கொள்முதல் செய்யப்பட்டு லாரி மூலம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளது.

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்த உடனேயே முக்தியை அருளும் ஆன்மீக தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை. இங்குள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் மிக முக்கியமான விழாக்களில் முதன்மையானது கார்த்திகை மாதத்தில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஆகும். கார்த்திகை தீபத் திருநாள் அன்று மாலையில் கோவிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையின் உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை தரிசனம் செய்தாலும், அன்றைய தினம் திருவண்ணாமலையில் கிரிவலம் வருவதும் முக்தியை தரும் என்பது நம்பிக்கை.

ஒவ்வொரு ஆண்டு  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். திருவண்ணாமலையில் சிவ பெருமான் ஜோதி வடிவமாக காட்சி அளித்ததை நினைவுபடுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா அன்று மலை மீது மகாதீபம் ஏற்றப்படுவது வழக்கம். திருவண்ணா மலையில் மலை மீது தீபம் ஏற்றப்பட்ட பிறகு தான் வீடுகளில் தீபம் ஏற்றும் வழக்கமும் உள்ளது.  இதில், பல்வேறு மாநிலங்களிலிருந்து மக்கள் வருவது வழக்கம். அந்த வகையில், 21ம் தேதியான இன்று நகர காவல் தெய்வமான துர்க்கையம்மன் உற்சவம் தொடங்கியது.

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2025 முழு விபரம் 

ல்வேறு சிறப்புக்களைக் கொண்ட கார்த்திகை தீபத் திருநாள் இந்த ஆண்டு டிசம்பர் 03ம் தேதி புதன்கிழமை வருகிறது. இதனை முன்னிட்டு திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2025 நவம்பர் 24ம் தேதி துவங்கி, டிசம்பர் 03ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இவ்விழா குறித்த அட்டவணை விபரங்களை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

நவம்பர் 24 திங்கள் – கொடியேற்றம் (காலை 6 முதல் 07.15 வரை)

நவம்பர் 27 வியாழன் – வெள்ளி கற்பக விருட்சம், வெள்ளி காமதேனு வாகனம்

நவம்பர் 28 வெள்ளி – வெள்ளி ரிஷப வாகனம்

நவம்பர் 29 சனி – வெள்ளி ரதம்

நவம்பர் 30 ஞாயிறு – பஞ்சமூர்த்திகள் மகா ரதம் (காலை 6 மணி முதல் 07.30 மணிக்குள் வடம் பிடித்தல்)

டிசம்பர் 03 புதன் – பரணி தீபம் (காலை 4 மணி), மகா தீபம் (மாலை 6 மணி)திருவண்ணாமலை தீபத் திருவிழா அன்று கோவிலுக்குள் சென்று மகா தீபத்தை தரிசிக்கவும், மலை மீது சென்று மகா தீபத்தை தரிசிக்கவும் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்ய வேண்டும்.

காலையில் ஏற்றப்படும் பரணி தீபத்தையும், மாலையில் மலை மீது ஏற்றப்படும் மகாதீபத்தையும் தரிசிப்பதற்கு குறிப்பிட்ட அளவிலான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான அறிவிப்புக்கள் விரைவில் வெளியிடப்படும் என சொல்லப்படுகிறது. அதே போல் மகாதீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்துபவர்களும் ஆன்லைன் வழியாக காணிக்கை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.