சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 23ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருவள்ளூருக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருநின்றவூர் யார்டில் எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் பேனல் அமைக்கும் பணி நடைபெற இருப்பதால், ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, ரயில் சேவைகளின் பாதுகாப்பான இயக்கத்தை உறுதி செய்யும் வகையில், திருநின்றவூர் யார்டில் எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் பேனல் அமைக்கும் பணிக்காக சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் பிரிவில் லைன் பிளாக்/ பவர் பிளாக் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக 23ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மதியம் 3.40 மணி வரை மொத்தம் 8 மணி நேரம் 40 நிமிடங்கள் புறநகர் ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு;-
வரும் 23ம் தேதி காலை 5.40 மணி மற்றும் காலை 6.10 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை – திருவள்ளூர் மின்சார ரயில், காலை 6.50 மணிக்கு புறப்படும்/
மூர் மார்க்கெட் – திருவள்ளூர் மின்சார ரயில், காலை 6.35 மணிக்கு புறப்படும்.
எண்ணூர் – திருவள்ளூர் மின்சார ரயில், காலை 7.45 மணி, 8.05, 8.40, 9.15, 9.35 ஆகிய நேரங்களில் புறப்படும்
மூர் மார்க்கெட் – திருவள்ளூர் மின்சார ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
காலை 10 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் – திருத்தணி மின்சார ரயில், காலை 9.55 மணிக்கு புறப்படும்
சென்னை கடற்கரை – திருவள்ளூர் மின்சார ரயில், காலை 10.30 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் – கடம்பத்தூர் மின்சார ரயில், காலை 10.40 மற்றும் 11.30 மணிக்கு புறப்படும்
மூர் மார்க்கெட் – திருவள்ளூர் மின்சார ரயில், காலை 11.45 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் – திருத்தணி மின்சார ரயில், மதியம் 12 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் – திருவள்ளூர் மின்சார ரயில், மதியம் 12.10 மணிக்கு புறப்படும்
சென்னை கடற்கரை – திருத்தணி மின்சார ரயில், மதியம் 12.40 மணிக்கு புறப்படும்
மூர் மார்க்கெட் – அரக்கோணம் மின்சார ரயில், மதியம் 1 மணிக்கு புறப்படும்
மூர் மார்க்கெட் – திருவள்ளூர் மின்சார ரயில், மதியம் 1.05 மணிக்கு புறப்படும்
சென்னை கடற்கரை – திருவள்ளூர் மின்சார ரயில், மதியம் 1.25 மணிக்கு புறப்படும்
மூர் மார்க்கெட் – அரக்கோணம் மின்சார ரயில், மதியம் 1.50 மணிக்கு புறப்படும்
மூர் மார்க்கெட் – திருவள்ளூர் மின்சார ரயில், மதியம் 2.15 மணிக்கு புறப்படும்
மதியம் 2.25 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை – அரக்கோணம் மின்சார ரயில், மதியம் 2.40 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் – திருவள்ளூர் மின்சார ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னைக்கு வரும் ரயில்கள்:
காலை 6.50 மணிக்கு புறப்படும் திருவள்ளூர் – மூர் மார்க்கெட் மின்சார ரயில், காலை 6.40 மணிக்கு புறப்படும் அரக்கோணம் – மூர் மார்க்கெட் மின்சார ரயில், காலை 7.30 மணிக்கு புறப்படும் திருவள்ளூர் – மூர் மார்க்கெட் மின்சார ரயில், காலை 7.55 மணிக்கு புறப்படும் திருநின்றவூர் – மூர் மார்க்கெட் மின்சார ரயில், காலை 7.10 மணிக்கு புறப்படும் அரக்கோணம் – மூர் மார்க்கெட் மின்சார ரயில்,
காலை 8.10, 8.20, 8.30, 9.10, 9.25, 10.05 ஆகிய நேரங்களில் புறப்படும் திருவள்ளூர் – மூர் மார்க்கெட் மின்சார ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
காலை 11 மணிக்கு புறப்படும் திருவள்ளூர் – சென்னை கடற்கரை மின்சார ரயில், காலை 11.30 மணிக்கு புறப்படும்
திருவள்ளூர் – மூர் மார்க்கெட் மின்சார ரயில், காலை 11.15 மணிக்கு புறப்படும்
அரக்கோணம் – மூர் மார்க்கெட் மின்சார ரயில், மதியம் 12 மணிக்கு புறப்படும்
திருவள்ளூர் – ஆவடி மின்சார ரயில், மதியம் 12.05 மணிக்கு புறப்படும்
கடம்பத்தூர் – சென்னை கடற்கரை மின்சார ரயில், மதியம் 12 மணிக்கு புறப்படும்
அரக்கோணம் – மூர் மார்க்கெட் மின்சார ரயில், மதியம் 1.05 மணிக்கு புறப்படும்
திருவள்ளூர் – மூர் மார்க்கெட் மின்சார ரயில், மதியம் 1.30 மணிக்கு புறப்படும்
திருவள்ளூர் – சென்னை கடற்கரை மின்சார ரயில், மதியம் 12.35 மணிக்கு புறப்படும்
திருத்தணி – மூர் மார்க்கெட் மின்சார ரயில், மதியம் 1.40 மணிக்கு புறப்படும்
அரக்கோணம் – மூர் மார்க்கெட் மின்சார ரயில், மதியம் 2.40 மற்றும் 3.05 மணிக்கு புறப்படும்
திருவள்ளூர் – மூர் மார்க்கெட் மின்சார ரயில், காலை 5 மணிக்கு புறப்படும்
ஆவடி – எண்ணூர் மின்சார ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு பதிலாக, பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்
சென்னையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில்கள்:
காலை 6.30 மணிக்கு மூர் மார்க்கெட் – அரக்கோணம், காலை 7 மணிக்கு மூர் மார்க்கெட் – திருத்தணி, காலை 7.25 மணிக்கு மூர் மார்க்கெட் – திருத்தணி, காலை 8.20 மணிக்கு மூர் மார்க்கெட் – அரக்கோணம், காலை 9.10 மணிக்கு மூர் மார்க்கெட் – திருத்தணி, காலை 9.50 மணிக்கு மூர் மார்க்கெட் – திருப்பதி, காலை 11 மணிக்கு மூர் மார்க்கெட் – அரக்கோணம், காலை 10.45 மணிக்கு மூர் மார்க்கெட் – ஆவடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
சென்னைக்கு வரும் சிறப்பு ரயில்கள்:
காலை 7 மணிக்கு திருவள்ளூர் – மூர் மார்க்கெட், காலை 6.20 மணிக்கு அரக்கோணம் – சென்னை கடற்கரை, காலை 7.35 மணிக்கு அரக்கோணம் – சென்னை கடற்கரை, காலை 8 மணிக்கு அரக்கோணம் – சென்னை கடற்கரை, காலை 8.15 மணிக்கு அரக்கோணம் – மூர் மார்க்கெட்டிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.