திருப்பூர்: திருப்பூரில் எஸ்.எஸ்.ஐ. ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,. இந்த கொலை செய்த கொலையாளியை போலீசார்  என்கவுன்ட்டர் செய்துள்ளனர்.

திருப்பூரில் விசாரணைக்குச் சென்ற சிறப்பு எஸ்.ஐ.கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த  3 பேரில் தந்தை மற்றும் ஒரு மகன் காவல்துறையில் சரணடைந்த நிலையில், 3-வது நபரான SSI-ஐ வெட்டிகொன்றதாக கூறப்படும்  மணிகண்டன் என்பவர்  தலைமறைவாகி இருந்தார். அவரை போலீசார் தேடிய நிலையில், அவர்  கைது செய்யப்ப்டடார்.

இதையடுத்து, மணிகண்டனை கைது செய்து சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றபோது, அங்கு அவர் அரிவாளால்  போலீசாரை தாக்க முயன்றதாகவும், அபபோது   மணிகண்டன் வெட்டியதில் காவல் உதவி ஆய்வாளர் சரவணனுக்கு கையில் காயம் ஏற்பட்ட நிலையில் தற்காப்புக்காக காவல்துறையினர் மணிகண்டனை என்கவுண்டர் செய்ததாக கூறப்படுகிறது.