திருமலை,
கடந்த ஆண்டு திருப்பதி கோவிலில் வருமானம் 995.89 கோடி என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஏழுமலையான தரிசிக்க இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானோர் கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
உலக பணக்கார சாமிகளில் முதன்மையாக இருந்து வருபவர் திருப்பதி வெங்கடேசன். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் பல வழிகளில் தங்களால் இயன்ற அளவு காணிக்கை செலுத்தி வருகிறார்கள்.
இங்கு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு விற்பனை மூலமும், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடி காரணமாக பல கோடிகள் வருமானம் கிடைத்து வருகிறது. மேலும் பக்தர்கள் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவு உண்டியலில் காணிக்கை போடுகிறார்கள்.
நாட்டின் பெரும் பண முதலைகள் கோடிக்கணக்கில் பணமாகவோ, தங்க வைர நகைகளாகவோ ஏழுமலையானுக்கு காணிக்கை செலுத்தி வருகிறார்கள்.
இதன் காரணமாக கடந்த 2017ம் ஆண்டு திருப்பதியில் சுமார் 2.73 கோடி பக்தர்கள் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளனர் என்று தேவ்ஸ்தானம் தெரிவித்து உள்ளது.
மேலும், இதன் காரணமாக உண்டியலில் 995.89 கோடி ரூபாய் காணிக்கை வசூலாகி உள்ளதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதவிர, 10.66 கோடி ரூபாய்க்கு லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த 2016-ம் ஆண்டில் வசூலாகி இருந்த 1046.28 கோடி ரூபாய் விட, 2017-ம் ஆண்டில் 50.39 கோடி ரூபாய் குறைவாக வசூலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.