திருமலை:
லகப்பிரசித்தி பெற்ற திருமலை பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி அக் 5-ந்தேதி முடிவடைகிறது. நாளை இரவு 7 மணிக்கு தங்க கொடிமரத்தில் கருட கொடி ஏற்றப்படுகிறது.

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி 5-ந்தேதி முடிவடைகிறது. இதனையொட்டி கோவில் மற்றும் கோவில் வெளிப்புறங்களில் பல்வேறு ண்ண மலர்கள், அரியவகையான பழ வகைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளது. மேலும் வண்ண மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளதால் திருமலை முழுவதும் மின்னொளியில் ஜொலிக்கிறது. பிரம்மோற்சவ விழாவையொட்டி அங்குரார்பணம் நடைபெறுகிறது.

இதையடுத்து பல்வேறு புதிய பானைகளில் நவதானியங்கள் விதைக்கப்படுகிறது. திருமலைக்கு நாளை வரும் ஆந்திர முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆஞ்சநேயர் சாமி கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்களை ஊர்வலமாக கொண்டு வந்து ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கிறார்.

இதையடுத்து இரவு 7 மணிக்கு தங்க கொடி மரத்தில் கருட கொடி ஏற்றப்படுகிறது.

பின்னர் பெரிய சேஷ வாகனத்தில் பூதேவி, ஸ்ரீதேவி சமேதராய் ஏழுமலையான் மாட வீதிகளில் உலா வருகிறார்.

2-வது நாள் காலை சின்ன சேஷ வாகனத்திலும், மாலை அம்ச வாகனத்திலும்,

3-வது நாள் காலை சிம்ம வாகனத்திலும், மாலை முத்து பல்லக்கு வாகனத்திலும்,

4-வது நாள் கல்ப விருட்ச வாகனத்திலும், மாலை சர்வ பூபால வாகனத்திலும்,

5-வது நாள் மோகினி வாகனத்திலும், மாலை தங்க கருட வாகன ஊர்வலம் நடைபெறுகிறது.

6-வது நாள் அனுமந்த வாகனமும், மாலை தங்கத்தேர் வாகன சேவை நடைபெறுகிறது.

7-வது நாள் காலை சூரிய பிரபை வாகனமும், மாலை சந்திர பிரபை வாகன வீதி உலா நடைபெறுகிறது.

8-வது நாள் காலை தேர் வீதி உலாவும், மாலை குதிரை வாகன ஊர்வலம் நடைபெறுகிறது.

9-வது நாள் காலை அங்குள்ள தெப்பத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

மாலை கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு 4 மாட வீதியில் சாமி வீதி உலாவை காண பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவைக்கான லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.