திருப்பதி

திருப்பதிக்குக் கால்நடையாக செல்லும் பாதை 7 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திருப்பதி கோவில் மூடப்பட்டது.

அதையொட்டி பக்தர்கள் கால்நடையாக வரும் பாதை மூடப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு கோவில் திறக்கப்பட்ட போதிலும்  நடை பாதை திறக்கப்படவில்லை.

தற்போது அந்த பாதை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த பாதையில் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டும் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால் பக்தர்கள் இருட்டுவதற்கு முன்பு கீழிறங்க முடியும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.