திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD) உண்டியலில் காசு மழை பெய்து வருகிறது. மாதம்தோறும் தேவஸ்தான உண்டியல் வருமானம் ரூ. 100 கோடிக்கு மேல் வருகிறது.
மார்ச் மாதம் திருமலை உண்டியல் வருமானம் ரூ.120.29 கோடியாக இருந்தது என்று TTD நேற்று அறிவித்தது.
இதன் மூலம் 2022-23ம் நிதியாண்டில் திருமலை திருப்பதி தேவஸ்தான உண்டியல் வருமானம் ரூ. 1,520.29 கோடி என்று தெரிவித்துள்ள TTD ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக ரூ.140.34 கோடி வருவாய் கிடைத்ததாகக் கூறியுள்ளது.
2022 ஜனவரி முதல் டிசம்பர் வரை 2.37 கோடி பக்தர்கள் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளனர் என்றும் உண்டியல் காணிக்கையாக ரூ.1,450 கோடி கிடைத்துள்ளதாகவும் கூறியது.
மேலும், 2021 ஜனவரி முதல் டிசம்பர் வரை 1.04 கோடி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததாகவும் ரூ.833.41 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்ததாகவும் தெரிவித்தது.
கோயிலுக்கு தேவையான தூபக் குச்சி தயாரிக்கும் ஆலையை நேற்று திறந்து வைத்து அதிகாரிகள். 2023 – 24 ம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ. 4,411.68 கோடியில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கோயிலுக்கு தினமும் தேவைப்படும் 3000 முதல் 4000 லிட்டர் பால் திருமலையிலேயே உற்பத்தி செய்யப்பட உள்ளதாகவும் மாடுகளுக்கு தேவையான தீவனங்களை தயாரிக்கும் ஆலை ரூ. 11 கோடி செலவில் கட்டப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.