திருநெல்வேலி
உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த திருநெல்வேலி கோவில் யானை மரணம் அடைந்துள்ளது.
தமிழ்கத்தில் மிகவும் பிரபலாமானற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் திருக்கோயில் யானை காந்திமதி, கடந்த 1985 ஆம் ஆண்டு நன்கொடையாளர்கள் மூலம் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த யானைக்கு தற்போது 56 வயதான நிலையில், வயது முதிர்வு காரணமாக காந்திமதி யானைக்கு பல்வேறு உடல் நலம் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.
நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி கடந்த ஒரு மாத காலமாக படுக்காமல் நின்றவரே தூங்கி, அன்றாட பணிகளை மேற்கொண்டு வந்தது. நேற்று அதிகாலை காந்திமதி யானை படுத்து தூங்கிய நிலையில், மீண்டும் அதனால் எழ முடியவில்லை.
உடனடியாக அரசு கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் மற்றும் வனத்துறை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு யானை காந்திமதிக்கு பல்வேறு மருந்துகள் கொடுக்கப்பட்டுகிரேன் உதவியுடன் கால்நடை மற்றும் வனத்துறை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர் இன்று காலை சிகிச்சை பலனின்றி நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி உயிரிழந்து உள்ளது.