டேராடூன்: உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் நேற்று ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய முதல்வராக பா.ஜ., எம்.பி., திரத் சிங் ராவத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று மாலை 4 மணிக்கு பதவியேற்க உள்ளார்.

உத்தரகாண்டில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மாநில முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் இருந்து வந்தார். ஆனால், கட்சிக்குள் எழுந்த அதிருப்தி காரணமாக, அவரை ராஜினாமா செய்ய பாஜக தலைமை அறிவுறுத்தியது. அதையடுத்து, அவர் நேற்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதைத்தொடர்ந்து இன்று மாநில பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம், கட்சியின் துணை தலைவர் ரமண் சிங், பொது செயலர் துஷ்யந்த் குமார் கவுதம் முன்னிலையில் நடைபெற்றது.
இதில், லோக்சபா எம்.பி., திரத் சிங் ராவத், மாநில முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அவர் இன்று மாலை பதவியேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]