லன்டன்:
மைசூர் புலி என்று அழைக்கப்பட்ட மைசூர் மகாராஜா திப்புசுல்தான் உபயோகப்படுத்திய அரிய பொருட்கள் மற்றும் போர் உபகரணங்கள் தற்போது லன்டன் ஏல நிறுவனத்தில் ஏலம் விடுக்கப்பட்டு வருகிறது.
திப்பு சுல்தான் உபயோகப்படத்திய வெள்ளி கவசத்திலான துப்பாக்கி பிரிட்டன் ஏலத்தில் 60,000 பவுண்டுகள் வரை அதிகரித்து வருகிறது.
இந்தியாவின் அரிய பொக்கிஷங்கள் வெளிநாடுகளில் ஏலம் போவதை இந்தியா தடுக்குமா என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராட்டி வீர மரணம் அடைந்தவர் திப்பு சுல்தான். இவரது மறைவுக்கு பிறகு, திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி பதித்த வாள், அரிய துப்பாக்கி (flintlock gun), போர் வாள்கள் அடங்கிய எட்டு அரிய தொல்லியல் பொருள்கள் இந்தியாவிலிருந்து லண்டன் கொண்டு செல்லப்பட்டன. அவை நேற்று இங்கிலாந்தில் உள்ள தனியார் ஏல நிறுவனத்தின் மூலம் ஏலம் விடப்பட்டு வருகிறது.
இந்த ஏலத்தின் ஆரம்பகட்ட மதிப்பே, ஒரு மில்லியன் பவுண்ட்க்கும் (சுமார் 9.12 கோடி) என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 60ஆயிரம் பவுண்டுகள் வரை ஏலம் கேட்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் பெர்க்ஷைர் மாகாணத்தை சேர்ந்த தம்பதியர், தமது பழைய வீட்டை சுத்தம் செய்தபோது, கிடைத்த பொருட்கள் என் திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கவசத்தாலான வாள், தீக்கல்லியக்கத் துப்பாக்கி (flintlock gun), போர் வாள்கள் அடங்கிய எட்டு அரிய கலைப் பொருள்களைக் கண்டெடுத்தனர்.
இவைகளை ஏலம் விட்டு நிதி திரட்டும் நோக்கில், ஆண்டனி க்ரிப் ஆர்ம்ஸ் & ஆர்மர் (Antony Cribb Arms & Armour Auctions) எனப்படும் ஏலம் விடும் நிறுவனத்திடம் ஒப்படைத்தனர். அந்த நிறுவனம் 26-3-2019 (நேற்று) ஏலத்தை விட்டுள்ளது. இதுகுறித்து கூறியுள்ள ஏல நிறுவனம், “பெர்க்ஷைர் தம்பதியினர் நிதி திரட்டும் நோக்கில் இவற்றை ஏலம் விடவில்லை என்றும், இந்தக் கலைப் பொருள்களை அருங்காட்சியகத்துக்கோ அல்லது இந்தியாவுக்கோ திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். அதற்காகவே இதைப் பொதுவெளியில் ஏலம் விடுகிறோம்” என்றும் தெரிவித்துள்ளார்.
‘ஏலத்துக்கு வந்துள்ள பொருட்களில் உள்ள ஒரு வாளில், ஹைதர் அலியின் சின்னம் தங்கத்தால் பொறிக்கப்பட்டிருக்கிறது. அதனால் இது திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியுடையதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. மற்ற வாள்கள் அனைத்தும் தங்கக் கைப்பிடியால் செய்யப்பட்டிருக்கின்றன.
துப்பாக்கி, போர் முனையில், கிழக்கிந்தியக் கம்பெனியின் படையைக் கடைசி வரை எதிர்த்து நின்ற மாவீரன் பயன்படுத்தியதாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, கடந்த 2014-ம் ஆண்டு, திப்பு சுல்தானின் தங்க மோதிரம் 1,45,000 பவுண்ட்களுக்கு கிறிஸ்டீஸ் நிறுவனத்தால் ஏலம் விடப்பட்டது.
2016-ல் நடைபெற்ற மற்றொரு ஏலத்தில் 6 மில்லியன் பவுண்ட்களுக்கு திப்புவின் மேலும் சில கலைப் பொருள்கள் ஏலம் போனது.
தற்போது மேலும் பல அரிய பொருட்கள் ஏலம் நடைபெற்று வருகிறது.