பாட்னா: தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் மக்களை நேரடியாக சந்திக்கப்போவதாக டிவிட் பதிவிட்டுள்ளார். அவரது இந்த டிவிட் அரசியல் கட்சி தலைவர் களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிகே எனப்படும் பிரசாந்த் கிஷோர், நிதிஷ்குமார் கட்சியில் இருந்து பிரிந்து மற்ற கட்சிகளின் வெற்றிக்காக பணியாற்றி வருகிறார். ஏற்கனவே பாஜக, காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்பட பல கட்சிகளின் வெற்றிக்காக பணியாற்றி உள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தெலுங்கான சட்டமன்ற தேர்தல் டிஆர்எஸ் கட்சிக்காக பணியாற்றப்போவதாக ஒப்பந்தம் போட்டுள்ளார்.
இந்த நிலையில், 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை அரியனை ஏற வைக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றப் போவதாக தகவல் வெளியானது. அதுதாடர்பாக சோனியாகாந்தி உள்பட மூத்த தலைவர்களை 4 முறை சந்தித்து பேசி, ஆலோசனை நடத்தியதுடன், பல்வேறு தகவல்களையும் பரிமாறிக்கொண்டதாக கூறப்பட்டது. சில நாட்களாகவே காங்கிரஸ் கட்சிக்காக வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பிகே பணியாற்ற இருப்பதாக தகவல்கள் வந்தன.
ஆனால், திடீரென அவர் காங்கிரஸ் கட்சியில் சேர மறுத்துவிட்டதாக காங்கிரஸ் தலைமை அறிவித்தது. அதை பிரசாந்த் கிஷோரும் உறுதி செய்ததார். தன்னைவிட காங்கிரஸ் கட்சிக்கு இப்போது தலைமை தான் முக்கியம் என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைவது குறித்து மூத்த தலைவர்களிடையே கடுமையான அதிருப்தி நிலவி வந்தது. இதனால், அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைவது காணல் நீரானது. இந்த நிலையில், பிரசாந்த் கிஷோர் இன்று மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது; திடீரென டிவிட் போட்டு அரசியல் கட்சி தலைவர்களை தன்னை நோக்கி பார்க்க பணித்துள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது; நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்களை சந்திக்க உள்ளேன் தெரிவித்துள்ளார்.
அதாவது, ஜனநாயகத்தில் அர்த்தமுள்ள பங்கேற்பாளராக இருப்பதற்கும், மக்கள் சார்பான கொள்கையை வடிவமைக்க உதவுவதற்கும் எனது தேடலானது 10 வருட ரோலர்கோஸ்டர் சவாரிக்கு வழிவகுத்தது!
நான் எனது பக்கத்தைத் திருப்புகிறேன். உண்மையான மாஸ்டர்களிடம் (மக்கள்) செல்ல வேண்டிய நேரம், நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்கள் பிரச்சினைகளையும், மக்களின் நல்லாட்சிக்கான பாதையையும் நன்கு புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது என பதிவிட்டுள்ளார்.
இதனால், பிரசாந்த் கிஷோர் சில எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் சில கட்சிகளின் ஆதரவுடன் அரசியல் கட்சி தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அல்லது, எதிர்க்கட்சிகளின் சார்பில், தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும், தேர்தல் வெற்றிக்கு பிறகு தலைவர் யார் என்பதை முடிவு செய்யும் வகையில், அவர் மக்களை சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த பல ஆண்டுகளாக மாநில கட்சிகளின் வெற்றிக்கு பணியாற்றி கோடிகளை குவித்து வந்த பிரசாந்த் கிஷோரை, தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியும் ஒதுக்கிய நிலையில், மற்ற கட்சிகளுக்கான ஏன் உழைக்க வேண்டும் என நினைத்து, தாமே அரசியல் களத்தில் நேரடியாக போட்டியிட்டு பிரதமராகிவிடலாம் என நினைத்து விட்டாரோ என்னவோ?