சென்னை

நேற்று மதியம் வரை சென்னை நகரில் 319.26 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

சென்னை  மக்கள் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடிய நிலையில், மாநகராட்சிப் பகுதிகளில் பட்டாசுக் கழிவுகளை அகற்றும் பணிகள் முதல் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

சென்னை மாநகராட்சிப்பகுதிகளில் அக்டோபர் 31ஆம் தேதி மதியம் முதல் நேற்று காலை 11 மணி வரை 319.26 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பட்டாசுக் கழிவுகள் தனியாக சேகரிக்கப்பட்டு கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் அமைந்துள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய கழிவுகள் சேகரிப்பு மற்றும் அகற்றும் தமிழ்நாடு வேஸ்ட் மேனேஜ்மென்ட் லிமிடெட் நிலையத்துக்கு தனி வாகனங்கள் மூலம் பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுகின்றன.