திருச்சி
நாளை முதல் அடுத்த மாதம் 29 ஆம் தேதி வரை மதுரை – பெங்களூரு சிறப்பு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
நாளை முதல் மதுரையில் இருந்து திருச்சி வழியாக பெங்களூருவுக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து, நாளை (புதன்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஜூலை) 29-ந்தேதி வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து நாளை (புதன்கிழமை) முதல் அதிகாலை 5.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திருச்சிக்கு காலை 7 மணிக்கு வந்து பின்னர் 7.12 மணிக்கு புறப்பட்டு கரூர், சேலம் வழியாக சென்று, பெங்களூருவுக்கு மதியம் 1 மணிக்கு சென்றடையும்.
மறுமார்க்கமாக, மதியம் 1.45 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் இந்த ரயில், திருச்சிக்கு இரவு 7.35 மணிக்கு வந்து 7.40 மணிக்கு புறப்பட்டு செல்லும் அதன் பின்னர் மதுரைக்கு இரவு 9.45 மணிக்கு சென்றடையும்.