சமூக ஊடகங்களில் பிரபலமானவரும் டிக் டாக்கில் 16.3 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் கொண்டவருமான கபீப் லாம் அமெரிக்க அதிபர் டிரம்பின் குடியுரிமை கொள்கை காரணமாக அமெரிக்காவில் இருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது.
விசா காலம் முடிந்த பின்னும் அமெரிக்காவில் சட்டவிரோதமானத் தங்கிவந்ததாகக் கூறி குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் அவர் அமெரிக்காவை விட்டு வெளியேறியதாகச் சொல்லப்படுகிறது.

கபீப் லாம் மீது நாடு கடத்தல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தாமாக முன்வந்து அமெரிக்காவை விட்டு வெளியேறினார் என்றும் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (ICE) செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
ஆப்பிரிக்காவின் செனகலில் பிறந்த கபீப், இளம் வயதிலேயே தனது பெற்றோருடன் இத்தாலிக்கு குடிபெயர்ந்தார். அவருக்கு ஒரு இத்தாலிய மனைவியும் உள்ளார்.
கோவிட் காலத்தில் தனது நடன நிகழ்ச்சிகள் மூலம் சமூக ஊடகங்களில் பிரபலமடைந்த அவர், டிக்டோக்கில் சுமார் 162 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டில் ஹ்யூகோ பாஸ் பிராண்டுடன் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கபீப், யுனிசெஃப் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார்.
கடந்த மாதம் நியூயார்க்கில் நடைபெற்ற ‘மெட் காலா’ நிகழ்விலும் அவர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.