புதுடெல்லி:

இன்டெக்சன் அடுப்பு சரியாக எரியவில்லை என்று கூறிய முஸ்லீம் கைதியின் முதுகில் சூடான கம்பியால் ஓம் என்று போட்டதாக திகார் சிறைக் கண்காணிப்பாளர் மீது புகார் எழுந்துள்ளது.


குற்ற வழக்கு தொடர்பாக கடந்த 2017 முதல் ஷபீர் என்ற நபீர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சம்வத்தன்று, தங்கள் அறையில் இருந்த இன்டெஇன்டெக்சன் அடுப்பு வேலை செய்யவில்லை என்று புகார் தெரிவித்திருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த சிறை கண்காணிப்பாளர் ராஜேஸ் சவுகான், ஷபீரின் முதுகில் சூடான கம்பியால் ஓம் என்று எழுதியிருக்கிறார்.

தொடர்ந்து அடித்தும் சித்ரவதை செய்திருக்கிறார். புகார் செய்து தலைவராக பார்க்கிறாயா என்று சொல்லியபடியே அடித்துள்ளார்.

அதன்பின்னர் 2 நாட்களுக்கு சபீருக்கு உணவு வழங்கவில்லை. அதற்கு, நவராத்திரியில் சாப்பிடாமல் இருந்ததால், நீ முஸ்லிம் மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறிவிட்டாய் என்று கூறியிருக்கிறார்.

நடந்த சம்பவம் குறித்து தன் பெற்றோருக்கு ஷபீர் தெரிவித்தார். இந்த பிரச்சினையை ஷபீர்  பெற்றோர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.
கடந்த 17 ம் தேதி ஷபியை நீதிமன்றத்துக்கு வழக்கம்போல் அழைத்து வந்தபோது, நடந்ததை சொல்லுமாறு நீதிபதி கேட்டார்.

ஷபீரும் நடந்ததை எல்லாம் ஒன்றுவிடாமல் நீதிபதியிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து, சிறையில் உள்ள சிசிடிவி காட்சிகளை 24 மணி நேரத்துக்குள் ஒப்படைக்க சிறைத்துறை டிஜிபிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால், நீதிமன்ற உத்தரவை டிஜிபி கண்டுகொள்ளவே இல்லை. இந்நிலையில், ஏப்ரல் 22ம் தேதிக்குள் சிசிடிவி காட்சிப் பதிவுகளுடன் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு டிஜிபிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.