திருவனந்தபுரம்:

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி சார்பில் பேரணி நட க்கிறது. இதில் கலந்துகொள்ள நாடு முழுவதும் இருந்து அந்த அமைப்பின் மாணவர்கள் கேரளாவுக்கு வ ந்து கொண்டுள்ளனர்.

 

இந்த வகையில் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் இருந்து மாணவர்கள் கொச்சுவெலி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் கேரளா புறப்பட்டனர். வரும் வழி முழுவதும் அந்த ரெயிலில் பயணம் செய்த சக பயணிகளுக்கு அவர்கள் தொல்லை கொடுத்துக் கொண்டே வந்ததாக ஆர்பிஎப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

முன்பதிவு அல்லாத ரெயில் பெட்டியில் பயணம் செய்த அவர்கள் பெட்டியின் உள்பக்க கதவை தாழிட்டு கொண்டனர். இதனால் இதர ரெயில் நிலையங்களில் பயணிகள் ரெயிலில் ஏற முடியாமல் அவதிப்பட்டனர். கண்ணூர் முதல் கோழிக்கோடு இடையில் ரெயில் பயணம் செய்த போது இத்தகைய செயலில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சமயம் அதிக பயணிகள் ரெயிலில் ஏறி இறங்கும் நேரமாகும். அந்த பெட்டி முழுவதும் அவர்களுக்கு ரிசர்வ் செய்யப்பட்டது என்று ஏபிவிபி அமைப்பினர் தெரிவித்துள்ளனர். கண்ணூர் ரெயில் நிலையத்தில் ஏற முடியாத பயணிகள் ஆத்திரமடைந்து இது குறித்து அடுத்த ரெயில் நிலையமான கோழிக்கோடு ரெயில் நிலையத்தில் புகார் செய்தனர்.

உடனடியாக அங்கு ஆர்பிஎப் போலீசார் ரெயிலில் ஏறி ஆய்வு செய்தனர். அப்போது ஏபிவிபி அமைப்பை சேர்ந்த 15 பேர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தது தெரியவந்தது. அவர்களுக்க 11 ஆயிரத்து 250 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த பெட்டியில் 12 மலையாளிகள் இருந்துள்ளனர். அப்போது அவர்கள் வந்தே மாதரம் என்று கோஷமிட்டனர்.

மேலும், வரும் வழியில் ரெயில் அவசர கால சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தியதாகவும் சக பயணிகள் குற்றம்சாட்டினர். இரவு நேரத்தில் சத்தமாக பேசி மற்றவர்களை தூங்க விடாமல் செய்ததாகவும் புகார் தெரிவித்தனர்.