சென்னை

தமிழக அரசு பேருந்துகளில் இனி 90 நாட்களுக்கு முன்பிருந்தே டிக்கட் முன்பதிவு செய்யலாம் என்பது அமல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது தமிழக அரசு பேருந்துகளில் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை 2 மாதங்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்யும் நடைமுறை 90 நாட்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பேருந்து பயணிகளிடமிருந்து கிடைத்த கருத்துக்களின் அடிப்படையில், பயணிகள் நீண்ட காலத்திற்கு முன்பே பயணத் திட்டமிடலுக்கு ஏதுவாக, தற்போது முன்பதிவு நடைமுறையில் மாற்றம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள 60 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யலாம் என்பதனை 90 நாட்கள் என உயர்த்தி இன்று அதாவது 18 நவம்பர், 2024 மதியம் 12 மணி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு http://www.tnstc.in மற்றும் TNSTC அதிகாரபூர்வ மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து சிரமமின்றி பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]