சென்னை:

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘காவிரிப் பிரச்சனைக்கு சட்டரீதியாக ஒரு முடிவை கண்டிருக்கிறோம். ஆனால் இதை நிறைவேற்றுவார்களா?, பயன் கிடைக்குமா?, விவசாயிகளின் வாழ்வாதாரம் வளம் அடையுமா? என்ற சந்தேகம் உள்ளது.

அதனால் கர்நாடகாவில் புதிதாக பொறுப்பேற்கும் குமாரசாமியிடம் பேசி ஜூன் 12ம்ந் தேதி காவிரி நீரை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 7 ஆண்டுகளாக நமக்கு வர வேண்டிய நீர் தடைபட்டுள்ளது. நீரை பெற தமிழக அரசு தவறினால் மீண்டும் டெல்டா பகுதி விவசாயிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்’’ என்றார்.