சென்னை: நெல்லை மாவட்டம் புளியங்குடி அமில சுண்ணாம்பு, தூயமல்லி அரிசி மற்றும் விருதுநகர் சம்பா வத்தல் (காய்ந்த மிளகாய்) ஆகிய மூன்று தமிழ்நாட்டைச் சார்ந்த தயாரிப்புகள் புவிசார் குறியீடு (ஜிஐ) பெற விண்ணப்பித்துள்ளன.

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குடிசை தொழிலாக சுண்ணாம்பு தயாரிப்பு தொழில் நடைபெற்று வருகிறது. சுண்ணாம்பு தயாரிக்க 10 முதல் 15 அடி உயர அளவிலான கன்வாய் அமைக்கப்படுகிறது. இதற்குள் ஓடைக்கல், கரித்துள் ஆகியவற்றை அடக்கி அடியில் தென்ன மட்டை, பனங்கொட்டை, தேங்காய் மட்டை உள்ளிட்ட எரிபொருளை பயன்படுத்தி வேக வைத்து சுண்ணாம்பு தயாரிக்கப்படுகிறது. இதை பலர் செய்து வருகின்றனர்.  இந்த சுண்ணாம்புக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

அதுபோல தூயமல்லி (Thuyamalli) எனப்படும் அரிசிக்கும் புவிசார் குடியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. பாரம்பரிய நெல் வகைகளில் முதன்மை இடத்தைப் பிடித்துள்ள இந்த தூயமல்லி நெல்லின் அரிசி, வெள்ளை நிறம் கொண்ட மிக சன்ன இரகமாக உள்ளது. இந்த அரிசியானது, பாரம்பரிய நெல் வகைகளில் வித்தியாசமானதாக கருதப்படும் ரகம், வெள்ளை கலந்த மஞ்சள் நிறமாகவும், தூய்மையாகவும் காணப்படுகின்றது

மேலும், விருதுநகா் சம்பா வத்தலுக்கும் (காய்ஞ்ச மிளகாய்) புவிசார் குறியீடூ பெற விண்ணப்பம் செய்யப்பட்டு உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது சம்பா மிளகாய் செடி.  மாவட்டத்தின் சின்ன பேராலி, பெரிய பேராலி மற்றும் மெட்டுக்குண்டு, செந்நெல்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சம்பா மிளகாய் வத்தல் பயிரிடப்படுகிறது. இந்த சம்பா வளத்தலாது  நடவு செய்த காலம் தொடங்கி 50 நாள்களில் பலன் தருகிறது. 15 நாள்களுக்கு ஒரு முறை கூலி தொழிலாளா்கள் மூலம் மிளகாய் வத்தல் பறிக்கப்படுகிறது. இந்த நிலையில், நடப்பு பருவத்தில் சம்பா வத்தல் விளைச்சம் அமோகமாக உள்ளது. இந்த மாவட்டத்தில் மட்டுமே சம்பா வத்தல் அதிகமாக விளைவிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் பெருமையை போற்றும் இந்த பழமையான பொருட்களுக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.