திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று, தனது வேட்புமனுவை தனது சகோதரி பிரியங்காவுடன் வந்து தாக்கல் செய்தார்.
மாவட்ட கலெக்டர் அஜயகுமாரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் கேரள மாநில காங்கிரஸ் தலைவர்கள் உம்மன் சாண்டி, ரமேஷ் சென்னிதாலா உட்பட பலர் பங்கேற்றனர்.
அதைத்தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் வாகன பேரணி நடைபெற்றது. வேனில் நின்றபடி சென்ற ராகுல் காந்தியும், பிரியங்காவுக்கும் தொண்டர்களை பார்த்து கையசைத்து சென்றனர். மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால், காவல்துறையினர் ஆங்காங்கே பேரி கார்டு வைத்து தடுத்திருந்தனர்.
மக்கள் கூட்டம் காரணமாக பேரிகார்டு விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், ஏஎன்ஐ செய்தியாளர் உள்பட 3 பேர் செய்தியாளர்கள் லேசான காயம் அடைந்தனர்.
இதைக்கண்ட ராகுல்காந்தி உடனடியாக வேனில் இருந்த இறங்கி ஓடோடி வந்தார். அவருடன் பிரியங்கா காந்தியும் வந்தார். அதற்குள் ஆம்புலன்ஸ் வாகனமும் அழைக்கப்பட்டது. காயம் அடைந்த செய்தியாளர்களை ஸ்டெச்சரில் ஏற்றி, ஆம்புலன்சில் ஏற்றும் வரை உடன் சென்று, அவரை ஆம்புலன்சின் உள்ளே ஏற்றுவது வரை உடனிருந்த ராகுல்காந்தி மனித நேயத்துடன் கவனித்துக்கொண்டார். அவருடன் வந்த பிரியங்கா காந்தி, காயம் அடைந்த செய்தியாளரின் செருப்பை கையில் எடுத்து வந்தார்.
ராகுல்காந்ததி, மற்றும் பிரியங்கா காந்தியின் மனிதாபிமான செயல் அங்கிருந்த மக்களிடையே பெரும் வரவேற்பையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தயது. இந்த சம்பவம் வயநாடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே இதுபோல பல முறை செய்தியாளர்கள் மட்டுமின்றி விபத்தில் எதிர்பாராதவிதமாக காயம்பட்ட பொதுமக்களையும் ராகுல்காந்தி காப்பாற்றி, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உதவி புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ராகுலின் உண்மையான முகம் இதுதான் என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது. ராகுலின் எளிமையான நடவடிக்கைகள் நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.