பாக்பாத்

பி யில் மூன்று இஸ்லாமிய மத போதகர்கள் ரெயிலினுள் தாக்கப்பட்டுள்ளனர்

பா ஜ க ஆளும் உ பி மாநிலம் பாக்பாத் மாவட்டம் அகேதா கிராமத்தை சேர்ந்த மூன்று மத போதகர்கள் குல்ஜார், இஸ்ரார் மற்றும் அஃப்ரார் டில்லி சென்று திரும்பி வந்துள்ளனர். டில்லியிலுள்ள மார்கசி மசூதியில் தொழுகையை முடித்து விட்டு ரெயிலில் வந்துக் கொண்டிருந்தனர்.  அப்போது அவர்களை அடையாளம் தெரியாத 6 பேர் தாக்கி உள்ளனர்.

இது குறித்து மூவரில் ஒரு மத போதகர்.  “நாங்கள் இறங்க வேண்டிய ரெயில் நிலையம் வந்ததும் இறங்கத் தயாரானோம்.  அப்போது அதே பெட்டியில் இருந்த ஆறு இளைஞர்கள் ரெயிலின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை இழுத்து மூடினர்.  நாங்கள் அவர்களை எதற்கு இவ்வாறு செய்கிறீர்கள் எனக் கேட்டதற்கு சற்று நேரத்தில் தெரியும் எனக் கூறி சரமாரியாக அடித்து உதைத்தனர்.  நாங்கள் எப்படியோ தப்பி வெளியே வந்தோம்.

நாங்கள் இது குறித்து பாக்பாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம்.  ஆனால் எங்கள் புகாரை ரெயில்வே நிலையத்துக்கு அங்குள்ள போலீசார் மாற்றி விட்டனர்.  எங்களை தாக்கியவர்களை எங்களால் அடையாளம் காண முடியும்” எனக் கூறி உள்ளார்.  இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரித்து வருவதாக தெரிய வந்துள்ளது.