ராய்ப்பூர்:

சட்டீஸ்கர் மாநிலர் மஹாசமுண்ட் மாவட்டத்தில் கள்ள ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டதாக டாக்டர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ. 100, ரூ. 500 என மொத்தம் ரூ.55 ஆயிரத்து மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

‘‘கோத்வாலி மற்றும் குற்றப்பிரிவு போலீசாரின் கூட்டுப்படையினர் குறிப்பிட்ட அந்த ஜெராக்ஸ் கடையில் நடத்திய இந்த அதிரடி சோதனையில் தவாரிகா பிரசாத் சாஹூ (வயது 31), அகிலேஷ் துருவ் (வயது 33), குந்தன் திவார் (வயது 36) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’’ என்று எஸ்பி சந்தோஷ் சிங் தெரிவித்துள்ளார். இதில் அகிலேஷ் துருவ் ஆயுதர்வேதா டாக்டர்.

மேலும், ஒரு கம்ப்யூட்டர், கலர் பிரின்ட்டர், பேப்பர், 3 மொபைல் போன்கள், இதர கச்சா பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர்கள் ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுக்களை சந்தையில் புழக்கத்தில் விட்டிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.