லூதியானா:
பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டம் புலன்வால் கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1ம் வகுப்பு பயின்ற குட்டு என்ற 8 வயது சிறுவன் ஆசிரியை பாடம் நடத்தியபோது உலறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை சிறுவனின் முடியை பிடித்து இழுத்தும், காதுகளை பிடித்து திருவியும் அடித்துள்ளார். இதனால் உடல் நிலை பாதிக்கப்பட்ட அச்சிறுவன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தான்.
பெற்றோர் அளித்த புகாரின் பேரில் துக்ரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட கல்வி அதிகாரி ஜஸ்ப்ரீத் கவுர் உத்தரவிட்டார். விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.