போபால்:
மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் காவல்துறைக்கு ஆள் சேர்க்கும் பணி நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வரிசையில் வரிசையில் நின்றவர்களின் மார்பில் எஸ்.சி, எஸ்.டி., ஓ.பி.சி. என அவர்கள் சார்ந்த ஜாதிப் பிரிவு எழுதப்பட்டிருந்தது.

இந்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் கடும் கண்டங்கள் எழுந்துள்ளது. இது குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து எஸ்பி விரேந்திர குமார் சிங் கூறுகையில், ‘‘ஆள்சேர்ப்பு முகாமில் இளைஞர்கள் மார்பில் பிரிவை எழுத உத்தரவிடப்படவில்லை. இது குறித்து விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Patrikai.com official YouTube Channel