சென்னை:

தூத்துக்குடிக்கு நேற்று சென்றிருந்த ரஜினி, கலவரத்திற்கு காரணம் சமூக விரோதிகள் என்று கூறியிருந்தார். இது மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினியின் கருத்துக்கு அனைத்துக்கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று பாண்டிச்சேரி வந்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ரஜினியின் தூத்துக்கு பேட்டி குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த ஸ்டாலின்,  ரஜினியின் தூத்துக்குடி கலவரம் தொடர்பான குரல், பாஜக குரலா? அல்லது அதிமுக குரலா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், தூத்துக்குடி கலவரத்திற்கு சமூக விரோதிகளே காரணம் எனக்கூறும் ரஜினி, அவர்கள் யார் என்பதை நாட்டிற்கு அடையாளம் காட்ட வேண்டும் என்றும்  சமூக விரோதிகளை ரஜினி அடையாளம் காட்டுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். போராட்டம் இல்லாத வாழ்க்கை இல்லை. ஜல்லிக்கட்டு அனுமதிக்கு போராட்டம் மூலமே தீர்வு காணப்பட்டது என்பது ரஜினிக்கு தெரியும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.