
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘திட்டம் இரண்டு’. திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பானது கடந்த ஜனவரி மாதத்தின் இறுதியில் நிறைவுபெற்றது.
கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து, படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவெடுத்தது.
‘திட்டம் இரண்டு’ திரைப்படம் சோனி லைவ் தளத்தில் வரும் ஜூலை 30ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]