சென்னை
தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் இந்தாண்டு 7535 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்துள்ளது.
தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள ஆண்டு திட்ட அட்டவணையில் ,
” ஏற்கனவே அறிவித்துள்ளபடி அரசு கலைக் கல்லூரிகளில் 4000 உதவி பேராசிரியர்கள் நியமனக்ம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டில் தோராயமாக 7,535 பணியிடங்கள் நிரப்பப்படும்.
தவிர 1,915 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் மாதத்திலும், 1,205 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு செப்டம்பர் மாதத்திலும் அறிவிப்பு வெளியாகும்”
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.