டில்லி

ந்த ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு அதிக நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

தற்போது அனைத்து மக்களின் வாழ்விலும் வங்கிகள் சேவை இன்றியமையாமல் ஆகி விட்டது.   எனவே மக்கள் வங்கியின் விடுமுறை நாட்கள் எப்போதெல்லாம் வருகிறது என்பதை முன் கூட்டியே தெரிந்து கொள்வது அவசியம் ஆகி உள்ளது.   ஒரு சில விடுமுறை நாட்களில் மட்டுமே நாட்டின் சில பகுதிகளில் வங்கிகள் மூடப்படுகின்றன.  மற்ற நாட்களில் நாடெங்கும் வங்கிகள் மூடப்படுகின்றன.

அவ்வகையில் இந்த மாதம் முதல் நாளான இன்று வங்கிகளுக்கு நாடெங்கும் விடுமுறை நாளாகும்.  இன்று புதிய கணக்கு வருடம் பிறப்பதால் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.   ஆயினும் ஊழியர்கள் இன்று பணிகளைப் புரிய வேண்டியது அவசியமாகும்.  அடுத்ததாக நாளை புனித வெள்ளி என்பதால் பல வங்கிகளுக்கு நாளையும் விடுமுறை ஆகும்.   ஒரு சில மாநிலங்களில் மட்டும் புனித வெள்ளிக்கு விடுமுறை கிடையாது. 

பிறகு மீண்டும் 4 ஆம் தேதி அன்று ஞாயிற்றுக் கிழமை காரணமாக வார விடுமுறை அளிக்கப்பட்டு வங்கிகள் இயங்காது.   அதன்  பிறகு ஏப்ரல் 5 ஒரே நாள் பணி நடக்கும்.   பிறகு தமிழகம், புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடப்பதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.   இதைத் தவிர மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நாட்களில் விடுமுறை விடப்பட உள்ளன.

அதன் பிறகு ஏப்ரல் 14 அன்று தமிழ்ப் புத்தாண்டு தினம், பிஜூ விசா, போகாக் பிஜூ, சீரோபா, அம்பேத்கர் ஜெயந்தி மற்றும் விஷு என விடுமுறைகள் பல மாநிலங்களில் விடப்படுகின்றன.    அடுத்த நாளான ஏப்ரல் 15 அன்று இமாசல பிரதேச தினம், வங்க புத்தாண்டு காரணமாக அம்மாநிலத்தில் விடுமுறை ஆகும்.  பிறகு ஏப்ரல் 21 அன்று ஸ்ரீராம நவமி முன்னிட்டு பல மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

அந்தந்த மாநில அரசுகளின் அறிவிப்புக்களுக்கு இணங்க வங்கி விடுமுறைகளில் மாறுதல் இருக்கும்.  எனவே மக்கள் வங்கிகளை இது குறித்து தொடர்பு கொண்டு அதற்கேற்ப தங்கள் பணிகளை நடத்திக் கொள்ளலாம்.   முக்கியமாக ஏப்ரல் 10 மற்றும் 24 ஆம் தேதிகளில் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமை காரணமாக நாடெங்கும் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.