சென்னை: இது வெறும் கட்சிக்கான கொடி அல்ல. தமிழ்நாட்டின் வெற்றிக்கான கொடி என தனது  தமிழக வெற்றிக்கழகம்  கட்சியின் கொடியை ஏற்றி வைத்து தொண்டர் களிடையே பேசிய நடிகர் விஜய் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியானது  சிவப்பு, மஞ்சள் பின்னணியில் இரண்டு போர் யானைகள் கொண்டும் நடுவில் வாகைமலர் கொண்ட லோகோவை கொண்டுள்ளது.

அரசியல் கட்சியை தொடங்கி உள்ள நடிகர் விஜய், தனது தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் கொடியை இன்று அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து தனது கட்சி அலுவலகத்தில் கட்சிக்கொடியை ஏற்றினார். முன்னதாக பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றன்.” என்று உறுதிமொழியேற்றார்.

இதையடுத்து,  த.வெ.க. கொடி பாடலும் வெளியிடப்பட்டது. இந்த பாடல் தமிழன் கொடி பறக்குது என்று தொடங்குகிறது.   கவிஞர் விவேக் எழுதி தமன் இசையமைத்து இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

இதையடுத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பேசிய தவெக தலைவர் விஜய் “இன்று நாம் எல்லாருக்கும் சந்தோஷமான நாள். நீங்கள் ரொம்ப நாள் வெயிட் பண்ணிட்டு இருந்தீங்க. என் நெஞ்சில் குடியிருக்கும் என் தோழர்களாகிய உங்கள் முன்னாடியும் சரி, தமிழக மக்கள் முன்னாடியும் சரி கொடியை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி.

இந்த கொடிக்கான விளக்கத்தை கண்டிப்பாக சொல்வேன். புயலுக்கு பின் அமைதி என்பது போல, இந்த கொடிக்கு பின்னும் ஒரு வரலாறு இருக்கிறது. அதுவரைக்கும் சந்தோஷமா கெத்தா கொண்டாடுவோம்.

இது வெறும் கட்சிக்கான கொடி அல்ல. தமிழ்நாட்டின் வெற்றிக்கான கொடியாக பார்க்கிறேன். இதுவரைக்கும் நமக்காக உளைத்தோம். இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டுக்காகவும் உழைப்போம். இது உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் நான் சொல்லாமலே கொண்டாடுவீங்கன்னு எனக்கு தெரியும். உரிய அனுமதியுடன் அனைவரையும் மீண்டும் சந்திக்கிறேன்.

வெற்றி நிச்சயம். நம்பிக்கையுடன் இருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்காக கட்சி அலுவலகம் அமைந்துள்ள சாலையின் இரு புறங்களிலும் தடுப்புகள் வைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகள் கலந்து கொள்ளும் மாவட்ட தலைவர்கள் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டடினர்.  அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். நீலாங்கரை கேஷுவரீவனா டிரைவ் சாலையில் பொதுமக்கள் நடைபயிற்சி செல்வதற்கு அனுமதி இன்றும் மறுக்கப்பட்டுள்ளது.