சென்னை: இது தமிழ்நாட்டுப் பள்ளிக்கல்வித் துறையின் பொற்காலம் இது தமிழ்நாட்டுப் பள்ளிக்கல்வித் துறையின் பொற்காலம் என வரலாறு பேச வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பெருமிதத்துடன் பதிவிட்டு உள்ளார்.
தமிழ் பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுடன் பாராட்டு விழா உள்பட ஐம்பெரும் விழா இன்று நடைபெற்றது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “ஐம்பெரும் விழா” நடைபெற்றது. இதில், தமிழ் பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுடன் முதலமைச்சர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பொது தேர்வில் தமிழ் பாடத்தில் 100/100 மதிப்பெண் எடுத்த மாணவர்கள் 43 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறைகளை திறந்து வைத்தார். அதன்படி மாநிலம் முழுவதும் சுமார் 22,931 திறன்மிகு வகுப்பறைகளை (SMART CLASS) முதல்வர் தொடங்கி வைக்கப்பட்டது.
இதையடுத்து, பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 1761 அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி (TAB) வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மேலும் 7 வது தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், படிங்க, படிங்க, படிச்சுக்கிட்டே இருங்க, படிப்பு ஒன்றுதான் யாராலும் பறிக்க முடியாது சொத்து எனக் குறிப்பிட்டுள்ளார். ஹ
முன்னதாக இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ”மாணவச் செல்வங்களே… உங்கள் கல்விக்கு எந்தத் தடையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு! எதிலும் கவனத்தைச் சிதறவிடாமல், எங்கேயும் தேங்கி நின்றுவிடாமல் தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதைத்தான் பதிலுக்கு உங்களிடம் நான் எதிர்பார்க்கிறேன்! நமது திராவிடன் மாடல் அரசில் தமிழ்நாட்டு மாணவர்கள் உயர உயரப் பறக்க வேண்டும்! இது தமிழ்நாட்டுப் பள்ளிக்கல்வித் துறையின் பொற்காலம் என வரலாறு பேச வேண்டும்!
இவ்வாறு தெரிவித்துள்ளார்.