இகாமர்ஸ் தளம் மூலம் முட்டைகளை ஆர்டர் செய்த நபர் அதில் ஒரு முட்டை உடைந்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அதற்காக ரீ-பண்ட் வாங்க நினைத்த அவர் புகாரளிப்பதற்கு முன்பாக, AI உதவியுடன் ஒரு முட்டைக்கு பதிலாக மேலும் சில முட்டைகள் உடைந்தது போன்ற புகைப்படத்தை உருவாக்கினார்.

AI மூலம் உருவாக்கப்பட்ட படத்தை கஸ்டமர் கேருக்கு அனுப்பிய அவர் உடைந்த முட்டைகளை அனுப்பியதாக இழப்பீடு கோரியுள்ளார்.
ஆதாரத்தை ஆராய்ந்த அந்த இகாமர்ஸ் தளத்தின் கஸ்டமர் கேர் குழுவினரும் அவரது கோரிக்கையை ஏற்று மொத்த பணத்தையும் திரும்ப தர ஒப்புக்கொண்டது.

இப்படி ஒரு சம்பவம் சாத்தியமா ?
சமூக வலைதள பதிவு ஒன்று.இது சாத்தியம் என்கிறது.
புகைப்படங்களை ஆதாரமாகக் கொண்டு வாடிக்கையாளர்களின் புகாரை தீர்க்க நினைக்கும் இகாமர்ஸ் நிறுவனங்கள் தற்போதைய காலகட்டத்தில் AI தொழில்நுட்பம் தங்களுக்கு எதிராக உள்ளதையும் உணரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதுபோன்ற புகைப்படங்களை நம்பி ரீ-பண்ட் வழங்க நேரிட்டால் இந்நிறுவனங்களின் 1% இழப்பு கூட பெரும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் என்று அச்சுறுத்துகின்றனர்.
AI vs AI சகாப்தத்தில் AI கொண்டு விளம்பரம் செய்து வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் தங்களுக்கு எதிராக அதே AI வில்லனாக உருவெடுக்க வாய்ப்பிருப்பதை எண்ணி செயலாற்ற வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.