டில்லி:

திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் நாளை முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி மறைவை தொடர்ந்து காலியாக உள்ள திருவாரூர் தொகுதி  தொகுதிக்கு  ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம்   அறிவித்துள்ளது. அதைத் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சியினர் சுறுசுறுப்பாக தேர்தல் களத்தை பணியாற்றத் தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, அமமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே வேளையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது தந்தையின் தொகுதியான திருவாரூர் தொகுதியை கைப்பற்றியே தீருவேன் என்ற குறிக்கோளுடன் களமிறங்க இருக்கிறார். அவர் திமுக தலைவராக பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால், திருவாரூர் தொகுதி தேர்தல் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மனுதாக்கல் தொடங்கும் நாள்  ஜனவரி 3ம் தேதி

மனு தாக்கல் செய்ய இறுதி நாள் ஜனவரி 10ம் தேதி

வேட்பு மனுக்களை திரும்பப் பெறும் நாள்  ஜனவரி 11 முதல் 14 வரை

வாக்குப்பதிவு ஜனவரி  28ந்தேதி

வாக்குகள் எண்ணிக்கை ஜனவரி 31ம் தேதி