நாகர்கோவில்: கன்னியாகுமரியில், திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா 2வது நாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது. இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருக்குறள் கண்காட்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
தொடர்ந்தது, திருவள்ளுவர் தோரணவாயிலுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், குமரியில் உள்ள சாலைக்கு ‘அய்யன் திருவள்ளுவர் சாலை’ என பெயர் சூட்டினார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத கடைசி வாரம் திருக்குறள் வாரமாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள 133 அடி உயரமுள்ள திருவள்ளுவரின் சிலை கடந்த 2000-ம் ஆண்டு நிறுவப்பட்டது. பல்வேறு புகழ்களை பாடும் இச்சிலையை அப்போதைய முதலமைச்சரான கருணாநிதி திறந்து வைத்தார். இந்நிலையில் இச்சிலையின் 25வது ஆண்டு வெள்ளி விழா 3 நாட்கள் கொண்டாட திட்டமிட்ட நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி இரண்டு நாட்களாக குறைக்கப்பட்டது.
இதையடுத்து, டிசம்பர் 30, 31 ஆகிய இரு நாட்கள் விழா நடைபெற்று வருகிறது. முதல்நாள் விழாவின்போது, ஏற்கனவே. நடுக்கடலில் உள்ள சுவாமி விவேகானந்தரின் நினைவு மண்டபமும் மற்றும் 133 அடி உயரமுள்ள கொண்ட திருவள்ளுவரின் சிலையும் இணைக்கும் வகையில் கண்ணாடி கூண்டு பாலமும் அமைக்கப்பட்டு இருந்த நிலையில், அந்த பாலம் பயனர்களின் வசதிக்காக திறந்து வைக்கப்பட்டது. சுமார் ரூ.37 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இக்கண்ணாடி கூண்டு பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச. 30) மாலை திறந்து வைத்தார். பின்னர், கடலின் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த விழாவில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் வெள்ளி விழாவின் இரண்டாவது நாளான இன்று திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி அமைக்கப்பட்ட திருக்குறள் புகைப்பட கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்தது, திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அதையடுத்து, குமரியில், திருவள்ளுவர் தோரணவாயிலுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், குமரியில் உள்ள சாலைக்கு ‘அய்யன் திருவள்ளுவர் சாலை’ என பெயர் சூட்டினார்.
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவின் 2-ம் நாள் நிகழ்ச்சி தொடங்கியது. வெள்ளி விழாவில் திருவள்ளூர் பசுமைப்பூங்கா, திருக்குறள் கண்காட்சி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். வள்ளுவர் தோரணவாயிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அடிக்கல் நாட்டினார். கடற்கரைச் சாலைக்கு திருவள்ளுவர் சாலை எனப் பெயர் சூட்டியுள்ளார்.
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா மலரை முதலமைச்சர் வெளியிட்டார். சிறப்பு மலரை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பெற்றுக்கொண்டார். திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவின் 2-ம் நாள் நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடிகர் கமல்ஹாசன் வரிகளில் உருவான வள்ளுவ மாலை பாடலை வெளியிட்டார்.
பின்னர் முதலமைச்சர் பேசுகையில் என் வாழ்நாளில் சிறந்த நாளாக கருதுகிறேன்.வள்ளுவருக்கு சிலை அமைக்க வேண்டும் என்பது கலைஞரின் நீண்டநாள் கனவாக இருந்தது என்று கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா சிறப்பு மலர் வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கலைஞர் வைத்த சிலையை போற்றக்கூடிய வகையில் வெள்ளி விழாவை திராவிட ஆட்சியில் நடத்தியதில் பெருமைப்படுகிறேன். வள்ளுவர் சிலை தொடங்கி கலைஞர் செய்த சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். கலைஞர் வழியில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தமிழுக்கும் உழைப்பதுதான் எனது கடமை
சிலை அமைத்ததற்கு எதற்கு விழா என்று சில அதிமேதாவிகள் கேட்டனர். வள்ளுவர் தமிழின் உலக அடையாளம், திருக்குறள் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம், அதனால் கொண்டாடுகிறோம், கொண்டாடுவோம். ரூ.37 கோடி மதிப்பிலான கண்ணாடி இழை பாலத்தை நேற்று திறந்து வைத்தேன். 12 கோடி ரூபாய் செலவில் திருவள்ளுவர் வாழ்க்கை வரலாற்றை பறைசாற்றக்கூடிய வகையில் 3டி காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
நம் மதம் குறள் மதம், நம் நெறி குறள் நிெ என்று கூறியவர் பெரியார். குறள் என்பது வகுப்பறையில் மட்டுமல்லாது உங்கள் இல்லங்களில் உள்ளங்களில் பரவ வேண்டும் என்று கூறினார் அண்ணா. திருக்குறள் தலைவராகவே வலம் வந்தார் கலைஞர். கலைஞர் பள்ளிப்பருவம் முதல் ஆட்சியில் இருந்தது வரை திருக்குறளுக்கு முக்கியத்துவம் அளித்தார். பேருந்துகளில் திருக்குறள், அரசு நிகழ்ச்சிகளில் திருக்குறள், வள்ளுவர் கோட்டம் கட்டியவர் கலைஞர். கலைஞரின் எண்ணத்துக்கு உருவம் கொடுத்தவர் கணபதி ஸ்தபதி.
திருவள்ளுவர் சிலைக்கு செல்ல 3 புதிய பயணிகள் படகுகள் வாங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முதல் படகுக்கு காமராஜர் பெயரும், 2-வது படகுக்கு மார்சல் நேசமணி பெயரும், 3-வது படகுக்கு ஜி.யு.போப் பெயரும் வைக்கப்படும்.
கன்னியாகுமரி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
மாவட்டந்தோறும் திருக்குறள் பயிற்சி வகுப்பு நடத்தப்படும்.
திருக்குறள் தொடர்பான கலை, இலக்கிய அறிவுசார் போட்டிகள் நடத்தப்படும்.
ஆண்டுதோறும் திருக்குறள் மாநாடு நடத்தப்படும். கன்னியாகுமரி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் கடைசி வாரம் குறள் வாரமாக கொண்டாடப்படும்.
தனியார் நிறுவனங்களில் திருக்குறள் எழுதப்படுவதற்கு ஊக்குவிக்கப்படும்.
திருக்குறளும், திருவள்ளுவர் சிலையும் நம் வாழ்க்கையை காக்கும் கேடயம்.
நம்மை அழிக்க நினைக்கும் தீமைகளை தடுக்கும்.
இவ்வாறு கூறினார்.