டெல்லி:

லைநகர் டெல்லியில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் சக்கூர்பூர் பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத் திற்கு திருவள்ளுவர் பெயர் சூட்ட வேண்டும் என்று டெல்லியின் தமிழக இளைஞர் கலாச்சார அமைப்பு வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மீண்டும் முதல்வர் கெஜ்ரிவாலை சந்தித்து மனு அளிக்க இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

டெல்லியில் உள்ள சக்கூர்பூர் காலனியின் சாலைக்கு திருவள்ளுவர் மார்க் என சுமார் 30 வருடங்களுக்கு முன்பு பெயரிடப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அந்த வழியாக இயக்கப்படும் மெட்ரோ ரயில் நிலையத்திற்கும் திருவள்ளுவர் என பெயர் சூட்ட வேண்டும் என்று அங்கு வசிக்கம் தமிழர்கள் சார்பில் டெல்லி முதல்வர் மற்றும் பிரதமர் மோடிக்கு மனு வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே டில்லியில் கடந்த 1975ம் ஆண்டு திருவள்ளுவர் அங்குள்ள  பூங்காவில் நிறுவப்பட்டது. பின்னர் அதை,  டெல்லி தமிழ் சங்கம் கட்டிட வாசலுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில், தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் உள்ள ரயில் நிலையத்துக்கு திருவள்ளுவர் ரயில் நிலையில் என பெயர் சூட்டும்படி டெல்லி  தமிழக இளைஞர் கலாச்சார அமைப்பு சார்பில் மீண்டும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.